உயிருக்கு உயிராய் காதல்.. கரம்பிடித்த கையுடன் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த ஜோடி.!

உயிருக்கு உயிராய் காதல்.. கரம்பிடித்த கையுடன் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த ஜோடி.!


salem-love-couple

காதலித்து திருமணம் செய்த ஜோடி, தங்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல் நிலையத்திSaல் தஞ்சம் புகுந்த சம்பவம் நடந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சாப்பாளையம், சுண்ணாம்பு சூளை பகுதியில் வசித்து வருபவர் தேவேந்திரன் (வயது 30). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள, முத்து மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் பட்டதாரி பெண்மணி ஐஸ்வர்யா (வயது 23).

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் காதலாக மாறவே இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனையடுத்து, நேற்று வீட்டினை விட்டு வெளியேறிய காதல் ஜோடியானது, அங்குள்ள பெருமாள் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டது. பின்னர், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சேலம் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.