புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அக்கா கணவருடன் பைக்கில் சென்ற அழகான பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்! அழகே ஆபத்தான கொடுமை!
சேலம் மாவட்டத்தில் அக்கா கணவருடன் பைக்கில் சென்ற கல்லூரி மாணவி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி சம்பவத்தன்று தனது அக்கா கணவருடன் அருகில் புத்தகம் வாங்குவதற்காக பைக்கில் சென்றுள்ளார். புத்தகம் வாங்கிவிட்டு இரவு 8 மணி அளவில் வீடு திரும்பியுள்ளனர். வீடு திரும்பும் வழியில் மாமாங்கம் அருகே வரும் வழியில் ஐந்துபேர் கொண்ட கும்பல் ஓன்று பைக்கை வழிமறித்து 10 ஆயிரம் பணம், கை கடிகாரம், வெள்ளி கைசெய்ன் போன்றவற்றை கொள்ளை அடித்துள்ளனர்.
மேலும் பைக்கில் சென்ற இளம் பெண்ணை அருகில் இருந்த புதரில் தூக்கி சென்று பலவந்தமாக கற்பழித்துள்ளனனர். மேலும், இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனனர்.
இந்நிலையில் இதுகுறித்து காவல் துறையில் சம்மந்தப்பட்ட மாணவி புகார் கொடுத்ததை அடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட ஐந்துபேரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
போலீசார் விசாரணையில் தாங்கள் ஜாலியாக இருப்பதற்காக இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுவந்ததாகவும், அந்த பெண் அழகாக இருந்ததால் அவரை கற்பழித்ததாகவும் விசாரணையில் கூறி உள்ளனர்.