"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
நாளே ஸ்டெப்பில் சிறுமி, கல்லூரி மாணவியை வீழ்த்தி உல்லாச வாழ்க்கை.. திருடனை நம்பி சென்று டீ விற்ற பரிதாபம்..! பகீர் வாக்குமூலம்.!
பள்ளி, கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக நடித்து கடத்தி சென்று தெருவில் டீ விற்க வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த காமக்கொடூரனின் வாக்குமூலம் பேரதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லியை சேர்ந்தவன் மணிமாறன் (வயது 40). இவன் கோயம்புத்தூரில் தங்கியிருந்த நேரத்தில், தன்னிடம் டியூசன் படிக்க வந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றான். இதனைப்போல, சிறுமியுடன் கன்னியாகுமரியில் தங்கியிருந்தபோது, வீட்டின் உரிமையாளர் மகளான கல்லூரி மாணவியையும் கடத்தி சென்றான்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி மற்றும் குமாரி காவல் துறையினர், கடந்த 8 மாதமாக கயவனை தேடி வந்தனர். மணிமாறன் மற்றும் கடத்தப்பட்ட சிறுமி உட்பட 2 பேர் திருப்பதியில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு சென்ற தனிப்படை அதிகாரிகள் மணிமாறனை அதிரடியாக கைது செய்தனர்.
இவர்களிடம் கோவையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும், மீட்கப்பட்ட சிறுமி கோவை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். கல்லூரி மாணவி பெற்றோருடன் சுசீந்திரம் அனுப்பி வைக்கப்பட்டார். மணிமாறனிடம் நடைபெற்ற விசாரணையில் அவன் அளித்த வாக்குமூலமாவது, "நான் ஆசிரியராக பணியாற்றி வந்தபோது, ஒழுங்கீன செயலால் பணிநீக்கம் செய்தனர். அதற்குப்பின், சேலத்தில் சொந்தமாக நிதி நிறுவனத்தை தொடங்கினேன். அதில் மக்கள் செய்த முதலீடை சுருட்டிக்கொண்டு உல்லாசமாக வாழ்ந்தேன், இது தொடர்பான புகாரில் காவல் துறையினர் தேடி வந்ததால், கோவைக்கு சென்றேன்.
அங்கு வருமானத்திற்காக டியூசன் எடுத்த நிலையில், நடனம் கற்றுக்கொண்டால் பெண்கள் என்னிடம் பழகுவார்கள் என்ற ஆசை வந்து முறைப்படி அதையும் கற்றுக்கொண்டேன். பின்னர், நடன வகுப்பு மற்றும் டியூசன் எடுத்து வந்தேன். நடனத்தின் மூலமாக பெண்கள் என்னிடம் பழக தொடங்கினர். அதனை வைத்து பணமும் சம்பாதிக்க தொடங்கினேன். அங்கு, எனது வீட்டிற்கு அருகே இருந்த 16 வயது சிறுமி நடனம் கற்றுக்கொள்ள வந்தார். அவர் வசதி படைத்தவர் என்பதால், பணத்திற்கு ஆசைப்பட்டு நெருங்கி பழகினேன். எனது தேன்போன்ற பேசினைக்கேட்டு சிறுமியும் என்னிடம் மயங்கினார்.
நான் சொல்வதையெல்லாம் செய்யும் கைப்பாவை பிள்ளைபோல அவரை மயக்கி வைத்தேன். பின்னர், நாம் எங்காவது சென்றுவிடலாம் என்று கூறவே, அவரும் சம்மதித்ததால் வீட்டில் இருந்து 8 பவுன் நகை மற்றும் ரூ.ஒன்றரை இலட்சம் ரொக்கம் எடுத்து வர சொல்லி தப்பி சென்றோம். பணத்தை வைத்து பொள்ளாச்சி, பழனி போன்ற இடங்களில் உல்லாசமாக இருந்தோம். சிறுமி குறித்து யாராவது கேட்டால் மகள் என்றும், கல்லூரியில் சேர்க்க அழைத்து வந்துள்ளேன் என்றும் கூறுவோம்.
இதற்கிடையில், காவல் துறையினர் எங்கள் இருவரையும் தேடி வந்ததால், பயத்தில் கன்னியாகுமரிக்கு சென்று வாடகை வீட்டில் குடியிருந்தோம். அப்போது, அவர்களிடம் சிறுமியை எனது அக்கா மகள், அக்கா இறந்துவிட்டதால் நான் கவனித்து வருகிறேன் என்று கூறினேன். அங்கு பழைய பொருட்களை வாங்கி வியாபாரம் செய்தேன். தொழிலில் எதிர்பார்த்த வருமானம் இல்லை. வீட்டின் உரிமையாளர் மகள் அவ்வப்போது எங்களின் வீட்டிற்கு வந்து செல்வார்.
அவருக்கு நடனம் ஆட வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால், அவரிடமும் எனது வித்தையை காண்பிக்க ஆரம்பித்தேன். அவரிடமும் நாம் திருமணம் செய்து எங்காவது வாழலாம் என கூறி, அவரின் வீட்டில் இருந்து 7 சவரன் நகை மற்றும் பணத்துடன் புறப்பட்டோம். நாங்கள் மூவரும் திருப்பதிக்கு சென்று தங்கினோம். அங்கு எடுத்து வந்த பணத்தை செலவழித்து, பணம் காலியானதால் டீக்கடை ஆரம்பித்தோம். கடைக்கு யாருமே வராததால், தெருத்தெருவாக மாணவிகளை டீ விற்பனை செய்ய அனுப்பி வைத்தேன்.
அதனால் வந்த வருமானத்தை வைத்து நான் உல்லாசமாக இருந்து வந்தேன். இதில் அதிகாரிகள் என்னை கைது செய்துவிட்டனர்" என்று தெரிவித்துள்ளான். கைது செய்யப்பட்ட மணிமாறன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவனால் வேறு பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளனரா? என்ற விசாரணையும் நடந்து வருகிறது.