தமிழகம்

வாடா நீ.. நான் ரௌடி.. நீ வாடி பார்த்துகிறேன்.. பள்ளியை சூறையாடி மாணவன் ரகளை.. பகீர் வீடியோ.! 

Summary:

வாடா நீ.. நான் ரௌடி.. நீ வாடி பார்த்துகிறேன்.. பள்ளியை சூறையாடி மாணவன் ரகளை.. பகீர் வீடியோ.! 

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் வட்டம், மஞ்சினி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவன், தனது தலைமுடியை சரியாக வெட்டாமல் ஸ்டைலாக அலங்காரம் செய்து வந்துள்ளார். இதனைகவனித்த தலைமை ஆசிரியர் மாணவனை கண்டித்து இருக்கிறார். 

இதனால் ஆத்திரமடைந்த மாணவன் தலைமை ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்ய முயற்சித்து, பள்ளியின் நாற்காலிகளை உடைத்து, அலுவலகத்தை சூறையாடி இருக்கிறான். மேலும், இதனை கண்டிக்க வந்த ஆசிரியர்களை அவமதித்து பேசி, ஆசிரியையை வாடி, போடி என பேசி ரகளை செய்துள்ளான். நான் ரௌடிதான் எனவும் ஆங்காரத்துடன் பேசி இருக்கிறான்.

இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவனின் தாத்தாவும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 


Advertisement