19 வயது இளம்பெண்ணுடன் 2 பெண்கள்.. தனிவீட்டில் நடந்த பலான தொழில்... திபுதிபுவென நுழைந்ததால் பதறல்..!

19 வயது இளம்பெண்ணுடன் 2 பெண்கள்.. தனிவீட்டில் நடந்த பலான தொழில்... திபுதிபுவென நுழைந்ததால் பதறல்..!


Salem Annathanapatti Prostitution

2 பெண்கள் 19 வயது இளம்பெண்ணை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்த பகீர் சம்பவம் அன்னதானப்பட்டி அருகே நடந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானப்பட்டி, மணியனூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து விபச்சார தொழில் நாதி வருவதாக அன்னதானப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மணியனூர் பாரதி நகரில் அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

அப்போது, குறிப்பிட்ட வீட்டிற்குள் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அவ்வப்போது வந்து செல்வது உறுதியாகவே, மடமடவென வீட்டிற்குள் புகுந்த அதிகாரிகள் விசாரணை செய்தனர். விசாரணையில், வீட்டில் விபச்சாரம் நடந்தது உறுதியானது.

Salem

மேலும், 19 வயது இளம்பெண்ணை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்த பெண் புரோக்கர்கள் சிந்து (வயது 33), பிரியங்கா (வயது 29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட இளம்பெண் சேலம் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.