அதிகாலையில் திமுகவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி! திமுக அமைப்பு செயலாளர் கைது! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம்

அதிகாலையில் திமுகவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி! திமுக அமைப்பு செயலாளர் கைது!


சென்னை ஆலந்தூரில் உள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் சென்று, போலீசார் இன்று அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தனர். 

கடந்த  பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்  தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து  ஆர்.எஸ் பாரதி பேசியது  சர்ச்சையை கிளப்பியது. நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் ஆர்.எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு  உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், ஆர்.எஸ் பாரதியை இன்று அதிகாலை கைது செய்தனர்.  

ஆர்.எஸ்.பாரதியை ஜாமீனில் விடுவிக்க தி.மு.க. வழக்கறிஞர் அணி நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா சமயத்தில் மக்களைத் திசை திருப்பும் முயற்சியாக ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக அரசுக்கு தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo