
சென்னை வியாசர்பாடியில் ஏஜென்சி ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றிவரும் கருப்பசாமி என்பவர் அவரது ட
சென்னை வியாசர்பாடியில் ஏஜென்சி ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றிவரும் கருப்பசாமி என்பவர் அவரது டாட்டா ஏஸ் வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு பட்டாக்கத்தியுடன் வந்த நபர், ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமியை முதுகில் வெட்டியதோடு, ஆட்டோ கண்ணாடியையும் உடைத்துள்ளார்.
பின்னர் அருகில் இருந்த இறைச்சிக் கடையில் உள்ள கண்ணாடியை சேதப்படுத்திய அந்த நபர், அவ்வழியாக வந்தவர்களையும் பட்டாக்கத்தி கொண்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து கருப்பசாமி மற்றும் இறைச்சிக்கடை உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ரகளையில் ஈடுபட்ட நபரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர் அப்பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பதும், அவர் மீது மேலும் சில குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. பட்டகத்தியை கையில் வைத்துக்கொண்டு அந்த நபர் எய்த செயல் அப்பகுகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement