தமிழகம்

வெடிகுண்டு வீசி காவலரை கொன்ற ரவுடியின் அடக்கத்தின் போது உடல் மீது வீச்சரிவாள் வைத்து அடக்கம்!

Summary:

Rowdy body buried with weapons

தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை பகுதியைச் சேர்ந்த குற்றவாளி துரைமுத்துவைப் பிடிப்பதற்காக, ஸ்ரீவைகுண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் அந்தப் பகுதிக்குச் சென்றனர். அப்போது,  குற்றவாளி தப்ப முயன்ற போது,  காவலர்கள் தொடர்ந்து சென்றனர். அவரைக் கைது செய்ய முயன்றபோது, காட்டு பகுதியில் இருந்த குற்றவாளி, தன்னைப் பிடிக்க வந்த  காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசியுள்ளான். 

அந்த நாட்டு வெடிகுண்டு வீச்சில், 28 வயதே ஆன காவலர் சுப்பிரமணியனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அந்த ரவுடி மற்றொரு குண்டை வீச முயன்றபோது அது கையிலேயே வெடித்து படுகாயமடைந்த ரவுடி துரைமுத்து உயிரிழந்தார். 

இதனையடுத்து அவரது கூட்டாளிகள் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ரவுடி துரைமுத்துவின் உடலும் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது சொந்த ஊரான வெள்ளூரில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால், உடல் மீது வீச்சரிவாள் வைத்து உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement