தமிழகம் இந்தியா

பட்டப்பகலில், வெட்டவெளியில் போலீசாரை சரம்வாரியாக தாக்கிய ரவுடிகள்! பதறவைக்கும் வீடியோ காட்சி!

Summary:

rowdies attacked police


 புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூரை அடுத்த கரிக்கலாம்பக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவர் ஊருக்குள் நுழைவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு ஜோசப் தடையை மீறி ஊருக்குள் வந்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் சோதனைச் சாவடி பணியில் இருந்து இரண்டு போலீஸ் அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய வகையில் வந்த இருவரை தடுத்து விசாரித்துள்ளனர். விசாரித்தபோது, அதில் ஒருவன் பெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி ஜோசப் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, ஜோசப் போலீசாரை தாக்க முயன்றுள்ளான். மேலும், ஜோசப் உடன் இருந்த அவரது சகோதரனும் போலீசாரை தாக்கியுள்ளான்.

இதனையடுத்து, இரண்டு ரவுடிகளும் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர். காயமடைந்த போலீசார் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தாக்கப்பட்ட போலீஸ் காரர்களில் ஒருவரின் சொந்த ஊரில் அவரை தாக்கிய ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.


Advertisement