சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாலை பணியாளர்! சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாலை பணியாளர்! சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்!


road worker harasment to young girl

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே வசித்து வரும் சிட்ராஜ், என்பவர், நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக பணிபுரிகிறார். 50 வயது நிரம்பிய இவர் அதே பகுதியில் வசித்து வரும், ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதனையடுத்து அந்த சிறுமி அவரது பெற்றோர்களிடம் சிட்ராஜ் செய்த கொடுமைகளை பற்றி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மஞ்சூர் காவல்நிலையத்தில் சிட்ராஜ் மீது புகார் அளித்தனர்.

harassment

இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிட்ராஜை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவால் உலகமே முடங்கி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஒரு சில கொடூரர்களின் கேவலமான செயல்கள் பொதுமக்களை மேலும் வெறுப்படைய வைத்துள்ளது.