தமிழகம்

சாலையை கடக்க முயன்றவருக்கு நேர்ந்த சோகம்.. அதிவேகத்தில் வந்த லாரி மோதி பலியான பரிதாபம்..!

Summary:

சாலையை கடக்க முயன்றவருக்கு நேர்ந்த சோகம்.. அதிவேகத்தில் வந்த லாரி மோதி பலியான பரிதாபம்..!

இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவரின் மீது அதிவேகத்தில் வந்த மினி சரக்கு லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அடுத்து ஐயப்பா நகரில் வசித்து வருபவர் நல்லசாமி. இவர் ஒரு விவசாயி. இந்த நிலையில், இவர் தனது தோட்டத்திற்கு செல்வதற்காக காங்கயம் சென்னிமலை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

தொடர்ந்து சாலையின் இடது புறமாக சென்ற அவர், வெப்பிலி பிரிவு அருகாமையில் சாலையின் மறுபக்கம் திருப்ப முயற்சித்துள்ளார். அப்போது அதிவேகத்தில் வந்த மினி சரக்கு லாரி ஒன்று அவர் மீது வேகமாக மோதியுள்ளது.

இதில் ஹெல்மெட் அணியாமல் நல்லசாமி சென்ற காரணத்தால், சாலையில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயத்துடன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நல்லசாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், இந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement