2 கிலோ பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால், 1 கிலோ அரிசி! அசத்தலான திட்டம்!

2 கிலோ பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால், 1 கிலோ அரிசி! அசத்தலான திட்டம்!



rice-free-for-plastic-garbage


பசுமை தாயகம் சார்பில் 4 நாட்கள் 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு ஒரு கிலோ தரமான அரிசி வழங்கப்படும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள  அறிக்கையில், பிலிப்பைன்ஸ் நாட்டிலும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் சில இடங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்ததால் அரிசி கொடுக்கும்  திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, 10 மாதங்கள் நிறைவடைந்து விட்டாலும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 

     ramadass

அந்த வகையில் தமிழ்நாட்டிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பிக்கை  தெரிவித்துள்ளார்  பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் . இதனால் மாவட்டத் தலை நகரங்களில் வரும் 9, 10 மற்றும் 16, 17 ஆகிய நாட்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் முகாம்கள் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் மூலம் 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் இந்தத் திட்டத்தை கிராம அளவிலும் விரிவாக செயல்படுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.