தமிழகம்

குடும்ப அட்டையை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!

Summary:

Ration card change

தமிழகத்தில் ரேசன் பொருட்களை பெறுவதற்கான குடும்ப அட்டைகளில் அதிகபடியானவை சர்க்கரை குடும்ப அட்டகளாக உள்ளதால், இதனை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி இன்று (26.11.2019) என தெரிவித்திருந்தது.  இந்த நிலையில் இதனை வரும் 29.11.2019- வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான சர்க்கரை குடும்ப அட்டைகள் உள்ளது.  ஆனால் இதுவரை 1 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே
இதனை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற பெறப்பட்டுள்ளன. இதனால் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலும் மூன்று நாட்கள் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. 

சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விரும்புவோர் வட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க  www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement