ஆசையாக வாங்கிய ஆப்பம், சாம்பார்.. திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு சம்பவம்

ஆசையாக வாங்கிய ஆப்பம், சாம்பார்.. திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு சம்பவம்


Rat found in hotel sambar near Covai government hospital

ஹோட்டல் சாம்பாரில் எலி குட்டி ஒன்று செத்து மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் திவ்யா. இவருடைய தம்பி கார்த்திகேயன் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது தம்பி சாப்பிடுவதற்காக நேற்று காலை திவ்யா அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள தனியார் உணவகம் ஒன்றில் ஆப்பம் மற்றும் சாம்பார் ஆகியவற்றை பார்சல் வாங்கியுள்ளார்.

பின்னர் மருத்துவமனைக்கு சென்று பார்சலை திறந்து ஆபத்தில் சாம்பாரை ஊற்றைய போது, சாப்பாட்டில் ஏதோ கருப்பாக ஒன்று கிடந்துள்ளது. அது என்று என்று எடுத்து பார்த்தபோது இருவருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அவர்கள் ஊற்றிய சாம்பாரில் இருந்து எலி குட்டி ஒன்று செத்து கிடந்துள்ளது.

உடனே சாப்பாடு பார்சலை எடுத்துக்கொண்டு திவ்யா தனது உறவினர்களுடன் அந்த கடைக்கு சென்று இதுகுறித்து முறையிட்டுள்ளார். இதுதொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் சமாதானம் அடையாத திவ்யா குறிப்பிட்ட ஹோட்டல் நிர்வாகம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து குறிப்பிட்ட உணவகத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். தற்போது அந்த ஹோட்டல் மூடப்பட்டுள்ளது.

ஹோட்டல் சாம்பாரில் எலி செத்து கிடந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.