தமிழகம் மருத்துவம் Covid-19

104 குழந்தைகளுக்கு கொரோனா! வேதனையுடன் ராமதாஸ் வேண்டுகோள்!

Summary:

Ramathas talk about corona

குழந்தைகளின் நலனை கருதி வெளியே சுற்றுவதை தவிருங்கள் என்று பொதுமக்களுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1,821 பேரில் 104 பேர் 12 வயதுக்கும் குறைந்த குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது.  104 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது வேதனையளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரித்துள்ளார்.

மேலும், இந்தநிலைக்கு நிச்சயம் குழந்தைகள் காரணமல்ல எனவும், அனைவரும் ஊரடங்கை மதித்து வீட்டிலே இருந்திருந்தாலோ, வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்திருந்தாலோ குழந்தைகளுக்கு இத்தகைய நோய்த்தொற்று பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Advertisement