பெற்றோருடன் சண்டை: பள்ளி வகுப்பறையில் தூக்கில் தொங்கிய 15 வயது மாணவர்.. கண்ணீர் சோகம்.!

பெற்றோருடன் சண்டை: பள்ளி வகுப்பறையில் தூக்கில் தொங்கிய 15 வயது மாணவர்.. கண்ணீர் சோகம்.!


Ramanathapuram School Student Died on College Campus

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏ.புனவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரின் மகன் தீபக். சிறுவன் தீபக் (வயது 15). இவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் பயின்று வருகிறார். 

இந்நிலையில், சிறுவன் இன்று காலை வழக்கத்தை விட, முன்கூட்டியே தனது பள்ளிக்கு சென்றுள்ளார். 

அங்கு தனது வகுப்பறைக்கு சென்ற மாணவர், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பள்ளிக்கு வந்த மாணவர்கள் தீபக் சடலமாக தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

விசாரணையில், மாணவன் தீபக் - பெற்றோர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் 10 நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். 

அவரை கண்டறிந்த பெற்றோர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், தற்போது பள்ளி வகுப்பறையில் வைத்தே விபரீத முடிவை தேடிக்கொண்டுள்ளார்.