தமிழகம்

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா-விசாகன் திருமண ஏற்பாடுகள் தீவிரம்; முக்கிய நபர்களுக்கே அழைப்பு.!

Summary:

rajinikanth- soundarya - vishakan - marriage

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபர் விசாகனுக்கும் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவர்களது திருமணம் வரும் 11ம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய திரை பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்பாக போயஸ் கார்டன் இல்லத்தில் வரும் 10ம் தேதி மாப்பிள்ளை அழைப்பும், பிறகு, 12ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முக்கிய பிரமுகர்கள் பலர் வருவதால் சென்னை தேனாம்பேட்டை காவல்  நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு வேண்டி லதா ரஜினிகாந்த் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதால், அந்த சமயங்களில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதோடு, போக்குவரத்தும் சரிசெய்யபட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


Advertisement