தமிழகம்

ஜெயலலிதா, ரஜினி வீடுகளில் வெடிகுண்டு மிரட்டல்; வெளியான பரபரப்பு சம்பவம்.!

Summary:

rajinikanth - jayalalitha - home - bom - youth arrest

சென்னை பேயாஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த், ஜெயலலிதா வீடுகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை 6 மணி அளவில் சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த், ஜெயலலிதா வீடுகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என்று கூறி போனை கட் செய்துள்ளார்.

இதனால் உஷாரான போலீசார் ரஜினிகாந்த், ஜெயலலிதா வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால் எந்தவித தடயங்களும் சிக்கவில்லை, இதற்கிடையில் யார் இந்த தகவலை எங்கிருந்து தெரிவித்தது என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கோவையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் மிரட்டல் விடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவரது பெயர் முகமது அலி என்பதும், மனஅழுத்தம் காரணமாக ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்ததுள்ளது. இந்த சம்பவத்தால் போயஸ் கார்டனில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement