அரசியல் தமிழகம்

ரஜினியின் அரசியல் முடிவால் அதிருப்தியடைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.! வேறு கட்சியில் இணைந்தனர்.!

Summary:

நடிகர் ரஜினிகாந்த் 2021 அரசியல் கட்சியை துவங்குவதாக அறிவித்திருந்தநிலையில், அவருக்கு ஏற்பட

நடிகர் ரஜினிகாந்த் 2021 அரசியல் கட்சியை துவங்குவதாக அறிவித்திருந்தநிலையில், அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடல்நிலை சீரானதை தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் ரஜினிகாந்த். 
 
இதனையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் மற்றும் பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், தனது  உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக தான் அரசியல் கட்சியிலிருந்து விலகுவதாக  நடிகர் ரஜினி அறிவித்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். 


ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என வலியுறுத்தி அவரது ரசிகர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தநிலையில், பல ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். இராமநாதபுரம், தேனி, வடசென்னை, தென்சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுகவில் இணைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement