அரசியல் தமிழகம்

வரும் தேர்தலில் ரஜினி போட்டி? அவரே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Summary:

Rajini announcement about general election 2019

சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வரமாட்டாரா என தமிழக மக்களும், ரஜினி ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், அனைத்துத்தொகுதிகளும் போட்டியிடப்போவதாகவும் கடந்தவருடம் அறிவித்தார் ரஜினி. அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுகளுக்கு மேலான நிலையில் தனது அரசியல் பயணம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் படங்களில் பிசியாக நடித்துவருகிறார் ரஜினி.

இந்நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் பொதுத்தேர்தல் வருவதை முன்னிட்டு, ரஜினி தேர்தலில் போட்டியிடுகிறாரா இல்லையா? வேறு எந்த கட்சிக்காவது ஆதரவு தருகிறாரார இல்லையா என்பது குறித்து எந்த ஒரு செய்திகளும் வெளியாகாமல் இருந்தது.

இதனை தொடர்ந்து ரஜினி ரசிகர்மன்ற கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் யாரும் எதிர்பாராத விதத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரஜினி. அதாவது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், எங்களது இலக்கு வரும் சட்டமன்ற தேர்தல்தான் என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் எங்களது ஆதரவு இல்லை என்றும், கட்சியின் கொடியையோ, அல்லது பெயரையோ யாரும் பயன்படுத்த கூடாது என்றும் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ரஜினி.


Advertisement