ரஜினி மீண்டும் நிர்வாகிகளுடன் ஆலோசனை.! கமல் - ரஜினி சந்திப்பிற்கு பிறகு நடக்கவிருக்கும் மாற்றம்.?

ரஜினி, வரும், 26ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


rajin-press-meet-on-tomorrow

நடிகர் ரஜினிகாந்த் 2021 அரசியல் கட்சியை துவங்குவதாக அறிவித்திருந்தநிலையில், அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடல்நிலை சரியானதையடுத்து குணமடைந்து வீடுதிரும்பினார் ரஜினிகாந்த். 
 
இதனையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் மற்றும் பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், தனது  உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக தான் அரசியல் கட்சியிலிருந்து விலகுவதாக  நடிகர் ரஜினி அறிவித்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். 

இந்தநிலையில், கடந்த சனிக்கிழமையன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் திடீரென்று சந்தித்துப் பேசிய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தலைவர் என அழைக்கப்படும் நபர் இன்னும் அரசியலை கவனித்து கொண்டுள்ளார். வாய்ப்பு இருக்கிறது என் பின்னால் வாருங்கள் என நான் சொல்லவில்லை. வாருங்கள் பணியாற்றுவோம் என்கிறேன் என தெரிவித்தார்.

rajini

இந்நிலையில், வருகிற 26-ஆம் தேதி ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். ரஜினி- கமல் சந்திப்பிற்கு பிறகு அரசியல் களத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நிர்வாகிகளையும், செய்தியாளர்களை சந்திக்கப் போகிறார். இதனால், ரஜினி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.