தமிழகம்

காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா.? ராஜேஸ் தாஸ் மீதான பாலியல் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்.!

Summary:

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளது.

தமிழக சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்தார். இதனையடுத்து ராஜேஷ் தாஸ் மீது சுமத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக, குற்றப்பிரிவு மத்திய குற்றப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது. 

இதனையடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கில் 'காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலையா?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்தநிலையில் இந்த வழக்கில் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.


Advertisement