ராட்சத ராட்டினத்தில் சிக்கிய சிறுமியின் தலை! சென்னையில் நிகழ்ந்த பதற வைக்கும் சம்பவம்!

Raittinam


Raittinam

ராட்சத ராட்டினத்தில் சிறுமியின் தலை சிக்கி கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த நேரத்தில் சிறுமியை காப்பாற்றாமல் தப்பி சென்ற ஆப்பரேட்டரை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னையில் உள்ள பெசன்ட் நகர் கடற்கரையில் தனியாருக்கு சொந்தமான விளையாட்டு பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. இதில் கேரளாவை சேர்ந்த சல்மா என்ற சிறுமி ராட்டினத்தில் ஏறியுள்ளார்.

Raittinam

அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுமியின் தலை ராட்டினத்தில் சிக்கி கொண்டுள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் பயந்து போன ஆப்பரேட்டர் சிறுமியை காப்பாற்றாமல் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

அதனை அடுத்து தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடந்தி வருகின்றனர்.