#RainAlert: தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?.! வானிலை ஆய்வு மையம் தகவல்..!



rain waring for tamilnadu

வளிமண்ட கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்தித்தொகுப்பில், ஆந்திர - தமிழக கடலோரப் பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு மற்றும் காரைக்கால் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், நீலகிரி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

tamilnadu

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையானது 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையானது 26 - 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவில் கள்ளக்குறிச்சி, திருவாரூரில் தலா 12 சென்டிமீட்டர், கடலூரில் தலா 11 சென்டிமீட்டர், பெரம்பலூர், தஞ்சாவூரில் தலா 9 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.