90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு...! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்க இருக்கும் நிலையில், இப்போதில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசாகவும் பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பர்லியாரில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை ஆய்வு மையம் கூறியுள்ளது.