உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.?

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.?



rain-in-tamilnadu-HZTYTE

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்தது. சுட்டெரிக்கும் வெயிலினால் பொதுமக்கள் வெளியில் வரமுடியாத சூழ்நிலை உருவானது. இந்தநிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் மழை பெய்துவருகிறது. இந்தநிலையில் வானிலை ஆய்வு மையம் மேலும், ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மே 24ஆம் தேதி புயலாக வலுப்பெற உள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

rainமேலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில், தேனி ,திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 24ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 25ஆம் தேதி கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.