தமிழகம்

தமிழகத்திற்கு இரண்டு நாட்களுக்கு நல்ல மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Summary:

rain in tamilnadu

தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் லேசான மழையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், நீலகிரி,கோவை,தேனி மற்றும் திண்டுக்கல்,மாவட்டங்களிலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகப்ட்ச வெப்பநிலை 38 டிகிரி குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், தென்மேற்கு மற்றும் மேற்கு-மத்திய அரேபிய கடல், தெற்கு மற்றும் கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் பலத்த காற்று வீசும். இதனால் ஒடிசா, கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 


Advertisement