தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.?

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.?



Rain in tamilnadu

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவையில், கனமழைக்கும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியகுமாரி ஆகிய மாவட்டங்ள் மற்றும் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே மழை விட்டு விட்டு பெய்துவருவதால் வெயில் இல்லாமல் குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருகிறது. இந்தநிலையில், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.