தமிழகம்

விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.! உச்சகட்ட சந்தோஷத்தில் விவசாயிகள்.!

Summary:

புதுக்கோட்டை மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

தமிழகத்தில் அக்டோபர் 2வது வாரத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், மழையை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த ஒரு மாதங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயில் வாட்டி வதக்கியது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதேபோல் தருமபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணி முதல் மிதமான மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் பயிா் சாகுபடிகளை மேற்கொண்டுள்ளனா்.


Advertisement