தமிழகம்

தமிழகத்தில் வெளுத்துவாங்கவிருக்கும் மழை! எந்த மாவட்டங்களில் தெரியுமா?

Summary:

rain in tamilnadu

தென்மேற்குப் பருவமழை காரணத்தினால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில், வளிமண்டலத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனீ மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், சேலம், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், தருமபுரி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும், அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Advertisement