தமிழகம்

அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

Summary:

rain in tamilnadu


தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஓட்டிய லட்சத்தீவு பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா மற்றும் தமிழக எல்லையை ஓட்டிய பகுதியில் நேற்று நிலவிய வளிமண்டல சுழற்சி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஓட்டிய லட்சத்தீவு பகுதியில் இன்று நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 


Advertisement