தமிழகம்

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

Summary:

rain in tamilnadu-


கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் மழை ஓய்ந்திருக்கிறது. ஆனாலும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் மீண்டும் தென்மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல சுழற்சிக் காரணமாக தென்தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Advertisement