சென்னையில் அதிகாலையில் இருந்து இடியுடன் வெளுத்துவாங்கும் கன மழை.!

சென்னையில் அதிகாலையில் இருந்து இடியுடன் வெளுத்துவாங்கும் கன மழை.!


rain in chennai

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த 2 தினங்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று  முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம்  உள்ளிட்ட பகுதிகள் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

rainசென்னையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதனால் பணிக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். இதனால் சென்னை முழுவதும் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. இதனிடையே தொடர்ந்து மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.