சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.!

சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.!


rain in chennai

நிவர் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 470 கிலோமீட்டர், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 440 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது. இது நாளை தீவிர புயலாக மாறி சென்னை- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தீவிர புயலாக கரையை கடக்கும்போது 100கி.மீட்டர் முதல் 110கி.மீட்டர் வேகத்திலும் அல்லது 120 கி.மீட்டர் வேகத்திலும் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்து வருகின்றது. இதனால் சாலையின் பல இடங்களில் நீர் தேங்கியுள்ளன.சென்னை மயிலாப்பூர், ராயப்பேட்டை, மெரினா, பாரிமுனை, அடையாற்றில் பலத்த மழை பெய்து வருகிறது. 

chennai

இந்த புயலால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய அதிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வேதாரண்யத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.