
Summary:
Rain expected 24 hours 7 district
தமிழகத்தை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடிவுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது தமிழகத்தில் உள்ள பெரம்பலூர்,அரியலூர்,புதுக்கோட்டை, சேலம்,தர்மபுரி, நாகை,கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடிவுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜூலை 29 ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement