மக்களே உஷார்... வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை... எந்தெந்த மாவட்டங்களில் எப்போது தெரியுமா.? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!



 Rain alert Chennai weather report

தென் தமிழகத்தை ஓட்டிய கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகின்ற 27,28 ஆம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Chennai weather report

மேலும் வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.