ஒரு நைட்டுக்கு எவ்ளோ? வெளிநாடு போலாமா? கலங்கடிக்கும் ஆபாச தொல்லை.. பதறும் நடிகை..!
காலம் கெட்டுப்போச்சு.... குடித்துவிட்டு சாலையில் வந்து சந்தி சிரிக்க வைத்த 2 பெண்கள்! டிராஃபிக் காவலரை காது கூசும் கெட்ட வார்த்தை கூறி..... பார்க்க முடியவில்லை! அதிர்ச்சி வீடியோ..!!!
திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே காவாங்கரை சிக்னல் பகுதியில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படும் இரு இளம் பெண்கள் விபத்து ஏற்படுத்தியதுடன், நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. GNT சாலையில் நடந்த இந்த நிகழ்வால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் சிரமத்துக்கு உள்ளாகினர். சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
வாகனம் மீது மோதி விபத்து
இன்று மாலை GNT சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த இரு பெண்கள், அசைந்தபடி வாகனம் ஓட்டியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்களும் போக்குவரத்து போலீஸாரும் அவர்களிடம் விசாரித்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை: காலை உணவில் விழுந்த பல்லி.. 19 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி..!
போலீஸாருடன் வாக்குவாதம்
அப்போது இரு பெண்களும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தட்டிக்கேட்ட பொதுமக்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து போலீஸாரிடமும் கடுமையாக பேசியதாக தெரிகிறது. போலீஸாரை ஒருமையில் பேசி கேள்வி எழுப்பியதாகவும், இதனால் அங்கு பரபரப்பு அதிகரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடுரோட்டில் அமர்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
நிலைமை கட்டுக்குள் வராத நிலையில், அந்த இரு பெண்களும் சாலையின் நடுவே அமர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றும் உடனடியாக முடியவில்லை. இதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரம் நீடித்த இந்த ரகளை அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, காவாங்கரை சிக்னல் பகுதியில் நடந்ததாக கூறப்படும் நிகழ்வின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது குறித்து பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். போக்குவரத்து போலீஸார் விதிமீறல் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவாகி வருகின்றன.
யார்...? இந்த, பெண்கள்
— A sadhakathulla 🇮🇳 (@ASadhakath48226) August 24, 2026
இருவரும், மது. அருந்திவிட்டு
சாலைக்கு வந்து சந்தி சிரிக்க..!
வைத்துவிட்டனரே..?
இதுவரை, இல்லாத
இதுபோன்ற.!. செயலை.!
நாடே..! கேள்வி கேட்கின்றதே..?
இதற்கு காரணமானவர்கள்
யாராக.? இருக்கமுடியும் pic.twitter.com/j3cVaeUKKS
இதையும் படிங்க: அதிவேகத்தில் எமனாக வந்த சிறுவன்.. ஆம்னி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நொடியில் நடந்த விபரீதம்.. பெண் பரிதாப பலி.!