தமிழகம்

டாஸ்மாக் கடையில் ஜல்லிக்கட்டுவிழா போல் பரபரப்பு.! புதுக்கோட்டையில் ஒரே நாளில் மட்டும் டாஸ்மாக் வசூல் எவ்வளவு தெரியுமா.?

Summary:

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலை வேகமெடுத்து வந்ததை அடுத்து கடந்த மே மாதம் முதல் தமி

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலை வேகமெடுத்து வந்ததை அடுத்து கடந்த மே மாதம் முதல் தமிழக்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. 

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் மீண்டும் டாஸ்மாக் கடைகளை நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மீண்டும் திறக்கப்பட்டது. 

இந்தநிலையில், தமிழக டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.127.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. இது வழக்கத்தை விட இரு மடங்கு விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.

பக்கத்து மாவட்டமான தஞ்சாவூரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் புதுக்கோட்டை மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அம்மாவட்ட மக்கள் படையெடுத்து வந்தனர். இதன்காரணமாகவே ஒரே நாளில் மட்டும் ரூ.7 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக கூறப்படுகிறது.


Advertisement