புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
புதுக்கோட்டை: கோவிலுக்கு சென்ற சகோதரிகளின் விதியை முடித்த எமன்; மணல் அள்ளிய பள்ளத்தில் சிக்கி துடிதுடித்து பலி.!
பெற்றோர் மழைக்காலங்களில் விழிப்புடன் இருப்பதே சிறார்களின் மரணம் ஏற்படாமல் இருக்க வழிவகை செய்யும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணக்கோன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரின் மனைவி கனகா. தம்பதிகளுக்கு காயத்ரி, கஸ்தூரி, கவிஸ்ரீ, துர்கா என 4 மகள்கள் இருக்கின்றனர். காயத்ரி அங்குள்ள பள்ளியில் எட்டாவதும், கவிஸ்ரீ எல்.கே.ஜி வகுப்பும் பயின்று வந்துள்ளார்.
நீர் நிரம்பி இருந்த குளம்
இவர்கள் இருவரும் அங்குள்ள காளியம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு பூஜை செய்ய சென்றதாக தெரியவருகிறது. தாயின் அறிவுறுத்தலின்பேரில் அவர்கள் சென்றுள்ளனர். கலக்குளம் பகுதி வழியே கோவிலுக்குச் சென்ற சிறுமிகள், மழையினால் நீர் நிரம்பி காணப்பட்ட குளத்தில் இறங்கி சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: பெண்கள் கழிவறைக்குள் ரகசிய கேமிரா; சலூன் கடை உரிமையாளர் கைது.!
மணல் அள்ளிய பள்ளத்தில் விழுந்து சோகம்
தண்ணீர் அதிகம் இருப்பதை உணராத சிறுமிகள், மணல் அள்ளியதால் ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். 2 மணிநேரமாகியும் பிள்ளைகள் வரவில்லை என குடும்பத்தினர் பதறியபடி குளத்திற்கு சென்று பார்த்தபோது, சிறுமிகளின் சடலம் மிதந்துள்ளது.
சிறுமிகளின் மரணத்தால் குடும்பமே சோகம்
இதனைக்கண்டு பதறிபோனவர்கள், அவசர ஊர்தி உதவியுடன் மருத்துவமனைக்கு சிறுமிகளை அனுப்பியபோது, அவர்களின் மரணம் உறுதி செய்யப்பட்டது. சிறுமிகளின் மரணத்தை உணர்த்த குடும்பத்தினர் கதறியழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: தவெக மாநாட்டில் மாயம்., 74 கிமீ நடந்து வீடுவந்து சேர்ந்த சிறுவன்.. ஆரத்தழுவி கண்ணீருடன் தாய் வரவேற்பு.!