தமிழகம் Corono+

ஒரு நபருக்கு கூட கொரோனா பரவல் இல்லை! கெத்து காட்டும் புதுக்கோட்டை! என்ன காரணம்?

Summary:

Pudukkottai IAs talk about corona

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள்  முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியதால் பிரதமர் மோடி  ஊரடங்கை மே 3 வரை அமல்படுத்தியுள்ளதால் கொரோனா பரவல் இந்தியாவில் சற்று குறைய தொடங்கியது. தமிழகத்திலும்
 கொரோனவை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கையை தமிழக சுகாதார துறை மேற்கொண்டு வருகிறது. 

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா ஒருவருக்குக்கூட பரவாமல் உள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ஒரு நபருக்கு கூட கொரோனா பரவாமல் இருக்கும் நிலையில், சுகாதார துறையினரும், மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை கொரோனா பரவாமல் இருப்பதற்கான காரணம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி அவர்களிடம் செய்தியாளர்கள் சந்தித்து பேசினர். அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சித்தலைவர், புதுக்கோட்டையில் இதுவரை கொரோனா பாசிட்டிவ் வராமல் இருப்பதற்கு முக்கிய காரணம் பொதுமக்கள்தான். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதில் இருந்தே பொதுமக்கள் இந்த ஊரடங்கு உத்தரவை சிறப்பாக கடைபிடித்து வருகின்றனர். அதேபோல் போலீசாரும் வெளியே தேவையில்லாமல் நடமாடும் பொதுமக்களின் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு தொடர்ந்துள்ளனர். 

 வெளிநாடுகளில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு திரும்பிய அனைத்து நபர்களையும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி, தினமும் அவர்களை சுகாதார துறையினரும், மாவட்ட நிர்வாகமும் கண்காணித்து வருகின்றனர். தற்போது மாண்புமிகு பிரதமர் அறிவுறுத்தலின் படி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை அணைத்து பொதுமக்களும் கடுமையாக கடைபிடித்தால் கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 


Advertisement