கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: வீட்டில் இதெல்லாம் மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: வீட்டில் இதெல்லாம் மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்!



public awarness for corona


சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போதுபல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. உயிரைக் குடிக்கக்கூடிய இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 6500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு,  தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் மருத்துவர்கள் தங்களால் முயன்ற அளவிற்கு சிகிச்சை செய்து பல உயிர்களை காப்பாற்றி வருகின்றனர். கொரோனா பரவாமல் தடுக்க இந்திய சுகாதாரத்துறை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

அதேபோல், தமிழகத்திலும் சுகாதாரத்துறை பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோன குறித்து பீதியை கிளப்பவேண்டாம் என எச்சரித்தும் வருகின்றனர். தமிழகத்தில் சுகாதாரத்துறை கடும் தீவிரமாய் செயல்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் ஆரம்பத்தில் இருந்து, தமிழகத்தின் அணைத்து விமான நிலையங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு செய்பட்டு தீவிர கண்காணிப்பில் தமிழக சுகாதாரத்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

corona

பொதுமக்களிடம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுமக்கள் யாரும் அச்சப்படவேண்டாம், கைகளை அடிக்கடி கழுவுங்கள், வெளி மாநிலங்குளுக்கு பயணங்களை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள் என அறிவுறுத்தி வருகிறார். கொரோனா குறித்து வீண் வதந்தியை கிளப்பி பொதுமக்களை அச்சப்படுத்தவேண்டாம் என தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அடிக்கடி அதிகபேர் கூடும் இடங்களை தவிர்த்துவிடுங்கள். வீட்டிற்கு தேவைப்படும் பொருட்களை தினமும் கடைக்கு சென்று வாங்காமல். மொத்தமாக வாங்கி வையுங்கள். யாரும் அச்சப்பட வேண்டாம், தமிழகம் பாதுகாக்கப்பட்ட மாநிலமாக செயல்பட்டு வருகிறது. இதற்க்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டியது அவசியம். தயவு செய்து பீதி, வந்தந்திகளை கிளப்பி பொதுமக்களை யாரும் அச்சப்படுத்தவேண்டாம். முடிந்தவரை வெளிப்பயணங்களை தவிர்த்துவிடுங்கள்.