ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
10 வருஷமாச்சு.. நம்பவே முடியலை.! செம ஹேப்பியில் நடிகை சினேகா.! அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா??
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் புன்னகை இளவரசி சினேகா. அவர் தற்போதும் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர, முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யாந்தா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் பிரசன்னா மற்றும் சினேகா தம்பதியினர் தங்களது மகனின் 10வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சினேகா நெகிழ்ச்சியான பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், இன்று உனது 10வது பிறந்தநாள். லட்டு நீ உனது வாழ்க்கையின் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளாய். பத்து ஆண்டுகள் கடந்துவிட்டதை எங்களால் நம்பவே முடியவில்லை.நேற்றுதான் உனது சிறு கைகளை பிடித்தது போல இருக்கிறது. ஆனால், தற்போது நீ ஒரு அன்பான, சிறந்த மகனாக வளர்ந்துவிட்டாய். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. லட்டு சிந்தனை, வீரம், நகைச்சுவை மற்றும் வாழ்க்கையின் மீதான ஆர்வம் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறாய் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவு வைரலான நிலையில் பலரும் நடிகை சினேகாவின் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: பல நடிகர்கள் அரசியல்வாதியாக.. நான் இதையே விரும்புகிறேன்.! திமுக மேடையில் நடிகர் ரவி மோகன் பேச்சு!!
இதையும் படிங்க: நடிகை சீதாவா இது.! திடீரென ஏன் இப்படி செய்தார்?? புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!