வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
இப்படி ஒரு திட்டமா! அன்பு ஆனந்தியை பிரிக்க துளசி செய்யும் சதி! அன்புவிற்கு தெரிய வருமா? சிங்கப்பெண்ணே ப்ரோமோ....
சன் தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள சிங்கப்பெண்ணே சீரியலில், கதையின் திருப்பங்கள் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் ஒளிபரப்பான எபிசோடில் அன்பு மற்றும் ஆனந்தி இடையே ஏற்படும் பிரிவு காட்சிகள், சோகம் மற்றும் சஸ்பென்ஸுடன் ரசிகர்களை ஈர்த்தன.
ஆனந்தி-அன்பு உறவில் சிக்கல்
கிராமத்து பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த சீரியலில், மனீஷா மகேஷ், தர்ஷக் கவுடா மற்றும் அமல் ஜித் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஆனந்தியின் அக்காவின் திருமண விழாவில், அவள் கர்ப்பமாக இருப்பது அனைவருக்கும் தெரியவர, வீட்டினர்கள் அன்புவிடம் இருந்து அவளைப் பிரிக்க முயற்சிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஆனந்தி கர்ப்பம் வெளிவந்தது! கதறிய அழும் ஆனந்தி! ஊர் பஞ்சாயத்து எடுத்த முடிவு! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ....
துளசியின் சதி
முன்னர் ஆனந்தி-அன்பு சேர வேண்டும் என விரும்பிய துளசி, இப்போது ஆனந்தியின் கர்ப்பம் காரணமாக அன்புவை தனக்கே கைப்பற்ற வேண்டும் என திட்டமிட்டு வருகிறார். ஆனந்தி வயிற்றுவலியால் தவித்தபோது, அவளைப் பார்க்க அன்பு வர முயற்சிக்க, துளசி மறைமுகமாக தடைகள் செய்கிறார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இந்த சதி அன்புவிற்கு தெரிய வருமா, துளசியின் உண்மை முகம் வெளிப்படுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கதையின் இத்தகைய சஸ்பென்ஸ் மற்றும் திருப்பங்கள், சீரியலின் TRP-யை உயர்த்தி, சன் டிவி யின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.
வரும் எபிசோடுகளில் சிங்கப்பெண்ணே சீரியல் மேலும் எந்தளவுக்கு சுவாரஸ்யம் கொடுக்கும் என்பது ரசிகர்களுக்குள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஈஸ்வரியின் உடல்நிலை குறித்து டாக்டர் கூறிய உண்மை! மரண பயத்தில் குணசேகரன்! தந்தைக்கு எதிராக கிளம்பிய தர்ஷன், தர்ஷினி! எதிர்நீச்சல் ப்ரோமோ...