பார்த்தாலே வெறுப்பாக இருக்கு.. விஷத்தை கக்குகிறீங்க.! எம்.எஸ் பாஸ்கரை திட்டிய நடிகர் சரத்குமார், நெப்போலியன்!!



Sarathkumar and nepolean scolded MS Bhaskar for act as villain in Selvi serial

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வருபவர் எம்.எஸ் பாஸ்கர். திரையுலகில் ஆரம்பத்தில் டப்பிங் கலைஞராகத்தான் பணியாற்றிய அவர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் தலைகாட்டினார். தொடர்ந்து வாய்ப்புகள் வராத நிலையில் சின்னத்திரையில் தாவிய அவர் மாயாவி என்ற தொடரின் மூலம் அறிமுகமானார்.

பின்னர் சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் பட்டாபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து செல்வி என்ற தொடரில் ஆண்டவர் லிங்கம் என்ற கேரக்டரில் ஒரு மோசமான வில்லனாக நடித்திருப்பார். பின்னர் தற்போது வரை பல படங்களில் எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று சிறப்பாக நடித்து பிரபல நடிகராக வலம் வருகிறார்.

MS Basker

அவருக்கு சமீபத்தில் பார்க்கிங் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது அவர் செல்வி தொடரில் ஆண்டவர் லிங்கம் கதாபாத்திரத்தில்  நடித்த போது என் அம்மா என்னிடம் பேச மாட்டார். எனக்கு சாப்பாடு போடமாட்டேன் என்று சொல்லிவிட்டார். என் மனைவியும் அப்படித்தான்.

இதையும் படிங்க: திருமணம் அப்போதுதான்.. ஓப்பனாக போட்டுடைத்து நடிகை சதா சொன்ன விஷயம்.! ரசிகர்கள் ஷாக்!!

என் மகளின் தலைமை ஆசிரியர் என்னை அழைத்து ஏன் நீங்கள் நல்ல ரோலில் நடிக்கலாமே?? என கேட்டிருந்தார். மேலும் சீரியலில் நடிக்கும் போது சரத்குமார், நெப்போலியனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அவர்கள் ஏன் இப்படி நடித்தீர்கள்? பட்டாபி கேரக்டரில் உங்களை எப்படி ரசித்தோம், கொண்டாடினோம். ஆனால் ஆண்டவர் லிங்கம் கேரக்டரை பார்த்தாலே வெறுப்பாக உள்ளது. முகத்திலேயே விஷத்தை கக்குகிறீர்கள். இந்த கேரக்டரை வேணாம் என்று சொல்லி இருக்கலாமே என்று கூறினர் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகை சீதாவா இது.! திடீரென ஏன் இப்படி செய்தார்?? புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!