நாங்கள் எப்படித்தான் வாழ்வது.? போராட்டத்தில் குதித்த கோயம்பேடு மார்க்கெட் சிறு வியாபாரிகள்.!

நாங்கள் எப்படித்தான் வாழ்வது.? போராட்டத்தில் குதித்த கோயம்பேடு மார்க்கெட் சிறு வியாபாரிகள்.!


protest in koyambed market

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கோயம்பேடு சிறு வியாபாரிகள் தெரித்துள்ளனர். மேலும், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படாமல் இருக்க கடைகளை தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கோயம்பேட்டை பொறுத்தவரை 1,800 க்கும் மேற்பட்ட சிறுகடைகள் உள்ளன.

koyambedu

இந்தநிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சிறுகடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் கடையின் உரிமையாளர்கள் என அனைவரும் கோயம்பேடு வணிக வளாகத்தை முற்றுகையிட்டு இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும் கோயம்பேடு மார்க்கெட் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.