மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்; கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் வாட்சப் குழுவில் இணைந்ததால் பரபரப்பு...!

மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்; கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் வாட்சப் குழுவில் இணைந்ததால் பரபரப்பு...!



Protest demanding justice for the death of student Smt. More than 300 college students joined the WhatsApp group causing excitement...!

கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க அண்ணா நகர் மற்றும் கீழ்ப்பாக்கத்தில் ஏராளமான காவல்துறையினர். குவிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் இருக்கும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 
ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதிகேட்டு கடந்த 17-ஆம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த பச்சையப்பா கல்லூரி மற்றும் கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். 

இதற்காக வாட்ஸ் அப் குழு ஒன்றினை தொடங்கி உள்ளனர். அந்த குழுவில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்துள்ளனர். இது தொடர்பாக மாணவர்கள் விடுத்த அழைப்பில், நமது தோழி ஸ்ரீமதிக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து பச்சையப்பன் கல்லூரி மற்றும் கொ.கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இந்த போராட்டத்திற்கு மாணவர்கள் தானாக வந்து திரள வேண்டும். காரணம் எந்த ஒரு சமூக அமைப்பு அல்லது அமைப்புடன் நடைபெறவில்லை. கல்லூரி மாணவர்களே முழுக்க முழுக்க ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள். மாணவர்கள் முழக்கத்தை மட்டுமே எழுப்ப வேண்டும். எந்த ஒரு வன்முறை செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து, போராட்டத்தில் மாணவர்கள் யாரும் ஈடுபடக்கூடாது  மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர். இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க அண்ணா நகர் மற்றும் கீழ்ப்பாக்கத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.