ஆசை வார்த்தை கூறி இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் கைது.!Prostitute broker arrested in Chennai

வெளி மாநிலங்களில் இருந்து சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக இளம் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

chennai

அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில் குன்றத்தூர் ஆண்டாள் குப்பம் பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவர் முக்கிய குற்றவாளியாக இருப்பது தெரியவந்தது. இதனிடையே அவரை போலீசார் கைது செய்ய முயற்சித்த நிலையில் ரியாஸ் தலைமறைவாகினார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

chennai

இந்த நிலையில் மும்பையில் தங்கியிருந்த ரியாஸ் இளம் பெண்களை மட்டும் தமிழ்நாட்டில் உள்ள பாலியல் புரோக்கர்களுக்கு அனுப்பி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து ரியாஸை கண்காணித்து நேற்று முன்தினம் அதிகாலை போரூர் அருகே கைது செய்தனர்.