தமிழகம்

தவற விட்டு விடாதீர்கள்.! கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.! அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி அறிவிப்பு.!

Summary:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இலுப்பூர்  மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் ஏற்கெனவே இரண்டுமுறை நடைபெற்றது.

அதில் பல இளைஞர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள். இந்தநிலையில் மீண்டும் 3வது முறையாக மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் இலுப்பூரில் மதர்தெரசா கல்லூரியில் மிக பிரம்மாண்டமாக நடத்தவுள்ளதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு ஆடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த ஆடியோவில் அமைச்சர் கூறுகையில், 103 கம்பெனிகள் பத்தாயிரம் பேரை தேர்ந்தெடுப்பதற்கு தயாராகி வருகிறார்கள். இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விராலிமலை தொகுதியைச் சேர்ந்தவர்கள், மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், படித்த உங்களது மகன் மற்றும் மகளை தயவு செய்து அனுப்பி வையுங்கள். அவர்களது படிப்பிற்கு ஏற்றவாறு நல்ல வேலை வாய்ப்பை நான் உறுதிப்படுத்தி தருகிறேன். அவசியம் வந்து விடுங்கள். வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். தவற விட்டு விடாதீர்கள். என தெரிவித்துள்ளார்.


Advertisement