தமிழகம்

மகப்பேறு மருத்துவர் எனக்கூறி மர்ம ஆசாமி செய்த மோசமான காரியம்! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பகீர் சம்பவம்!

Summary:

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் சக்திவேல் என்பவர் நகை கடை நடத்திவருகிறார். கடந்த சில நாட்களு

சென்னை வேளச்சேரியை சேர்ந்த சக்திவேல் என்பவர் நகை கடை நடத்திவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவரது நகை கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் வந்துள்ளார். அவர் தான் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், மகப்பேறு மருத்துவராக பணிபுரிந்து வருவதாகவும், தனது பெயர் சஞ்சய் எனவும் கடை உரிமையாளரிடம் அறிமுகமாகி உள்ளார்.

பின்னர் தனது மனைவிக்கு நகை ஒன்று வாங்க வேண்டும் என்று கூறி, ஒரு நகையின் மாடலை தேர்வு செய்து, அந்த நகையை மருத்துவமனைக்கு கொடுத்து அனுப்புங்கள், அங்கே வைத்து பணத்தை கொடுத்து விடுகிறேன் என கூறி சென்றுள்ளார். இதனை நம்பிய கடையின் உரிமையாளர், சஞ்சய் தேர்வு செய்த நகையுடன் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவமனையில் டிப்டாப் உடையில் காத்திருந்த சஞ்சய் நகையை பெற்றுக் கொண்டு அதை செல்போனில் படம் பிடித்து மனைவிக்கு அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து செல்போனில் புகைப்படம் எடுப்பது போலவே பாவனை செய்து கண்ணிமைக்கும் நேரத்தில்  6 பவுன் நகையுடன் எஸ்கேப் ஆகியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சக்திவேல் மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement