பெரிய பெண்ணாக ஆகிவிட்டதால் சங்கடமாக இருக்கிறது! சாதிக்க துடிக்கும் ஏழை மாணவி!

பெரிய பெண்ணாக ஆகிவிட்டதால் சங்கடமாக இருக்கிறது! சாதிக்க துடிக்கும் ஏழை மாணவி!



poor-student-talk-abiut-her-life


நாகர்கோவிலை அடுத்த வெள்ளிச்சந்தை புளியமூட்டில் கொட்டகை அமைத்து நாடோடிக் குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்நிலையில் வெள்ளிச்சந்தையில் வசித்த இரண்டு நாடோடிக் குடும்பங்களில் உள்ள ஐந்து குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்திருக்கிறார் வெள்ளிச்சந்தை அரசுப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பத்மதாஸ். 

அவ்வாறு பள்ளியில் சேர்த்த பிள்ளைகளில் ஒருவர்தான் மாணவி கங்கா. இந்த மாணவி தற்போது பி.எஸ்சி படித்துவருகிறார். இந்தநிலையில் மாணவி கங்கா கூறுகையில் தனது பெற்றோர் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். இருவரும் ஒவ்வொரு  ஊராக சென்று குடை தைப்பது, செருப்பு தைத்து பொழப்பு நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் வெள்ளிச்சந்தை கிராமத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த போது பத்மதாஸ் அவர்கள் என்னையும் என் அண்ணன் மற்றும் மூணு பிள்ளைங்களையும் அங்கிருந்த அரசுப் பள்ளியில் சேர்த்தார். மற்ற மூணு பேர் படிப்பைப் பாதியிலே நிறுத்திய நிலையில் என் அண்ணன் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்ததால் படிப்பை நிறுத்திவிட்டான்.

poor student

நான் மட்டும் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன், தற்போது நான் பிஎஸ்சி படித்து வருகிறேன், கூடாரத்தில் மழை வந்தால் கூடாரம் ஒழுகும். அதனால் அருகில் உள்ள கடைகளின் முன்புறம் தங்கியிருப்போம்.  விடிந்ததும் 6 மணிக்குக் கடை திறக்க ஆள்கள் வருவார்கள் அதன்பின்பு, நாங்கள் எழுந்துகொள்வோம். 

அவ்வாறு எழுப்பும்போது எனக்கு அவமானமாக இருக்கும். கூடாரத்துக்கு வந்து பல முறை அழுதிருக்கிறேன். மேலும், நான் பெரிய பெண்ணாக ஆகிவிட்டதால் கடை முன்னாடி படுக்க சங்கடமாக இருக்கும். அதனால் குடிசையில் தங்குகிறேன் மழை வந்தாலும் கூட. நான் படித்து முடித்த பின்னர் வங்கி பணியில் சேர வேண்டும் என்பதே எனது ஆசை என கூறியுள்ளார்.